நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி சில நாட்களுக்கு முன்னர் தாங்கள் பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ரவி மோகன் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், நடிகர் ரவி மோகன் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாடகி கெனிஷாவுடன் கலந்துகொண்டார். இந்த விவகாரம் மிகவும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாடகி சுசித்ரா, ஆர்த்தி ரவியை பிரபல நடிகருடன் இணைத்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆர்த்தி ரவியின் தந்தை பாடகி சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.