சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக வணிக கேஸ் சிலிண்டர்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதால், வீதியோர கடைகள் மற்றும் சிறு உணவகங்கள் கோவையில் மூடப்பட்டு வருகின்றன.
கடந்த ஒரு வார காலமாக வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பெரிய ஓட்டல்கள் மட்டுமின்றி, சிறு உணவகங்கள் நடத்தி வருவோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு ரூ.1928-க்கு விற்ற வணிக கேஸ் சிலிண்டர், தற்போது ரூ.115 உயர்ந்து ரூ.2043.50 ஆக அதிகரித்துள்ளது. சிலிண்டர் தட்டுப்பாட்டை காரணம்காட்டி மும்மடங்குக்கு மேல் விலையை உயர்த்தி, ரூ.5,200 முதல் ரூ.5,500 வரை விற்கின்றனர்.
இதன் காரணமாக கோவை மாநகரில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தெருவோர கடைகள் முறைகேடான வணிக கேஸ் சிலிண்டர் விற்பனையால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
