நிறங்களை வைத்து மனிதரின் மனநிலை மாறலாம்!!!!! தெரியுமா ? or  கேள்விப்பட்டிருக்கீங்களா ? நிறங்கள் மனிதர்களின் மனநிலையை மாற்றுமாம்….

144
Advertisement

மனிதர்களின் மனநிலையை மாற்றும் நிறங்களை பற்றி விவரிக்கிறது இந்த காணொளி.

நாம் பார்க்கும் ஒவொரு நிறமும் மனிதர்களின் மனநிலையை மாற்றும் தன்மை கொண்டது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். எந்த நிறத்தை பார்த்தால் எந்த மனநிலையின் இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

முதலாவது அதிர்ந்த நிலம் நிறம் இதனை பார்த்தால் ஒருவர் தான் தனித்து விடப்பட்டது போன்றும் , ஆழ்ந்த துயரத்தில் இருப்பது போன்றும் உணர்வார்கள் என்று சொல்லப்படுகிறது.

இரண்டாவது வெளிர் பச்சை நிறம் , இது மன அமைதியின் நிறமாக பார்க்க்கப்படுகிறது, மேலும் இந்த நிறம் பதற்றம் மற்றும் வேதனையை போக்கும் நிறமாக இருக்கிறது என்று கருதப்படுகிறது.

மூன்றாவது அடர் பச்சை நிறம் ,இந்த நிறம் பொறாமையின் வண்ணமாக பார்க்கப்படுகிறது , காரணம் இதனை பார்ப்பதாள் மனதில் இருக்கும் பொறாமை குணம் வெளிப்படுமாம்.

நான்காவது ஊதா நிறம் இது செல்வ செழிப்பின் வண்ணமாக பார்க்கப்படுகிறது , மேலும் இந்த நிறம் படைப்பாற்றல் , கற்பனை திறனை தூண்டும் என்று கூறப்படுகிறது.

ஐந்தாவது சிவப்பு நிறம் இது பொதுவாகவே danger என்று சொல்வார்கள் ஆனால் சிவப்பு நிறம் மன தைரியத்தயும் , எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணத்தை  , வீரத்தயும் அளிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆறாவது வெள்ளை  நிறம் இது ஒரு தூய்மையின் அடையாளமாக பார்க்கப்படுவதோடு, மனதில் அமைதியையும் ,மற்றவர்கள் மீது அன்பும் , கருணையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு நிறத்திற்கும் ஓவ்வொரு அர்த்தம் இருக்கிறது என்று உளவியல் நிபுணர்கல் தகவல்களை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.