‘தளபதிதான் எப்பவுமே’..மாநாட்டிற்கு ஹெல்மட் அணியாமல் பைக்கில் சென்ற கல்லூரி மாணவிகள்

த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடபுடலாக நடந்தன.

மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று நள்ளிரவு முதல் லட்சக்கணக்கான தொண்டர்கள் வரத்தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் மாநாடு நடைபெறும் பாரப்பத்தி பகுதியில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தளபதிதான் கெத்து என கூறிக்கொண்டே கல்லூரி மாணவிகள் 3 பேர் ஹெல்மட் அணியாமல் பைக்கில் சென்றுள்ளனர்.

Related News

Latest News