தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ஹீமா பிந்து (வயது 20). பி.எஸ்சி., பட்டப்படிப்பு படித்து வந்த இவர் பூனை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து மீர்பேட் காவல் நிலைய ஆய்வாளர் சங்கர் குமார் கூறும்போது, கல்லூரி மாணவி ஹீமா பிந்து தத்தெடுத்து வளர்த்து வந்த பூனை திடீரென மரணம் அடைந்துள்ளது. இந்த வருத்தத்தில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்திருக்கிறார். இதனை அறிந்து, உடனடியாக அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் மரணம் அடைந்து விட்டார் என கூறினார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
