Monday, March 17, 2025

20 ஆண்டுகளாக பல மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி பேராசிரியர்

உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் அரசு நடத்தி வரும் சேத் பூல் சந்த் பாக்லா முதுகலை கல்லூரியில் ரஜ்னீஷ் குமார் (59) என்பவர் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அக்கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மாணவிகளுக்கு பரீட்சையில் நல்ல கிரேட் தருவது, வேலை வாங்கி தருவது ஆகிய ஆசைகளை காட்டி பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் இந்த செயல்களில் 20 வருடங்களுக்கும் மேலாக இந்த செயலை செய்துவந்துள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் 13 அன்று தான் அவர் மீது எப்ஐஆர் பதவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் காவல்துறை நடவடிக்கை எடுப்பதை அறிந்ததும், ரஜ்னீஷ் குமார் தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து தலைமறைவான பேராசிரியர் ரஜ்னீஷ் சின்ஹாவை தேடும் பணியில் ஹத்ராஸ் போலீஸ் ஈடுபட்டுள்ளது.

Latest news