நாட்டின் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. பனிமூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது.
டெல்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா , ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது.
டெல்லியில் 6 டிகிரி செல்சியஸ்க்கு கீழ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் நெருப்புகளை மூட்டி தங்களை குளிர் இருந்து காத்துக்கொள்கின்றனர்.