குளிர்காலத்துல இப்படி குளிக்காதீங்க! மாரடைப்பு வரும் ஆபத்து அதிகம்

111
Advertisement

டிசம்பர் மாதம் முடிந்தாலுமே இன்னும் குளிர் விட்ட பாடில்லை.

குளிரை சமாளிக்க பலரும் சுடுதண்ணீரில் குளித்து வரும் நிலையில், அப்படி குளிக்காமல் குளிர்ந்த நீரில் குளிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என ஒரு தரப்பு கூறி வருகின்றனர்.

எந்த ஒரு நாள்பட்ட நோய்களும் இல்லாத மனிதர்களுக்கு குளிர்ந்த நீர் குளியல் பயன்தரும் என சில ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஆனால், அவ்வாறு திடீரென குளிர்ந்த நீரில் குளிப்பது மாரடைப்பு வரை பாதிப்பை ஏற்படுத்த கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உடலில் குளிர்ச்சியான நீர் பட்டவுடன் இதயத் துடிப்பு அதிகமாகி படபடப்பான உணர்வு மேலோங்குகிறது. இது ஏற்கனவே இதய நோய் இருப்பவர்களுக்கு, மாரடைப்பு வரும் சூழலை உருவாக்குகிறது.

குளிர் காலத்தில் குறைவான சூரிய ஒளி இருப்பதால், மந்தமான நடவடிக்கைகள் உடலில் உள்ள இரத்த குழாய்கள் சுருக்கம் ஏற்பட்டு உப்பு தேக்கம் மற்றும் இரத்தம் உறையும் சாத்தியக் கூறுகள் அதிகரிக்க காரணமாக அமைகிறது.

அதிகப்படியான சூடான தண்ணீரும் இதே போல உடலுக்கு அதிர்ச்சி அளிக்க கூடும் என்பதால் மிதமான வெப்பமுடைய நீரில் குளிப்பதே சிறந்தது என கூறும் மருத்துவர்கள், முதலில் இடுப்புக்கு கீழ்ப்பகுதியில் குளிக்கப்போகும் தண்ணீரை ஊற்றி உடலுக்கு பழக்கப்படுத்தி பின் குளிப்பது நல்லது என அறிவுறுத்துகின்றனர்.