Saturday, February 22, 2025

கோவையில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : 7 மாணவர்கள் கைது

கோவையில் 17 வயது சிறுமியை 7 பேர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் 7 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சமூக வலைத்தளம் வாயிலாக சிறுமிக்கு குறுஞ்செய்தி அனுப்பி ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச்சென்று 7 பேர் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் பலாத்காரம் செய்த 7 மாணவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரையாடல்கள் போன்ற ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.

Latest news