கோவை மாவட்டம் சிங்காநல்லூர், காமராஜர் சாலையில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இங்கு கடந்த 24ம் தேதி முருகன் என்ற வாடிக்கையாளர் பெட்ரோல் நிரப்ப வந்துள்ளார். அப்போது பெட்ரோல் கீழே சிந்திவிட கூடாது என்பதற்காக, பெட்ரோல் பங்க் ஊழியர் சென்சார் Pumb-ஐ சில முறை நிறுத்தியதாக தெரிகிறது.
அப்போது தான் ஏமாற்றப்படுவதாக தவறான புரிந்து கொண்ட முருகன், பெட்ரோல் பங்க் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஊழியரை திட்டி, தாக்கியுள்ளார். மேலும் தனது நண்பர்களை அழைத்து வந்து பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்த லாரியின் கிளீனர் சக்திவேல் என்பவரை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.