கோவை மாவட்டம், அவினாசி மேம்பாலம் அருகே சுமார் 20 மெட்ரிக் டன் எடை கொண்ட எரிவாயு கொண்டு சென்ற டேங்கர் லாரி நேற்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் டேங்கர் பகுதி சேதம் அடைந்ததால் உள்ளே இருந்த எரிவாயு கசிந்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு எரிவாயு கசிவு நிறுத்தப்பட்ட நிலையில், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணன், கைது செய்யப்பட்டார். ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், மரணம் விளைவிக்கும் வகையில் ஓட்டுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.