Friday, February 13, 2026

காபியா? டீயா? வெறும் வயிற்றில் குடிக்க எது சிறந்தது?

உலகெங்கிலும் பலரால் பெரிதும் விரும்பப்படும் பானங்களில் காபியும் டீயும் முக்கியமானவை. உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சியையும், மனதிற்கு சுறுசுறுப்பையும் தரக்கூடிய இவற்றில், எந்த பானம் அதிக ஆற்றலை அளிக்கும் என்ற கேள்வி பலருக்கும் உண்டு.

ஆரோக்கிய நன்மைகளைப் பொறுத்தவரை, காபி மற்றும் தேநீர் இரண்டுமே ஆன்டிஆக்ஸிடன்ட் நன்மைகளைத் தந்தாலும், அவற்றின் வழிமுறைகள் வேறுபடுகின்றன. காபி உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் செயல் திறனை மேம்படுத்துகிறது. மேலும், டோபமைன் வெளியீட்டை அதிகரித்து மனநிலையைச் சீராக்குகிறது.

தேநீர் மன அழுத்தத்தைக் குறைத்து, மூளை ஆரோக்கியத்தைப் பேணி, மன உறுதித்திறனை அதிகரிக்கிறது. தேநீரின் மன அழுத்த குறைப்புச் செயல்பாடு, நிலையான ஆற்றல் வளர்ச்சிக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

உங்கள் அன்றாடப் பழக்கவழக்கங்கள் மற்றும் உடல் தாங்கும் திறனைப் பொறுத்தே எது சிறந்தது என்பது அமையும். உடனடி ஆற்றல், தீவிர சுறுசுறுப்பு, காலையில் விழித்தெழ, அல்லது உடற்பயிற்சிகளை மேம்படுத்த காபியைத் தேர்வு செய்யலாம்.

மாறாக, நிலையான கவனம், அமைதியான ஆற்றல், பதட்டக் குறைவு, மற்றும் நாள் முழுவதும் மனத் தெளிவுக்காக தேநீரைத் தேர்ந்தெடுக்கலாம். ஒருபுறம் காபி தீவிர ஆற்றலை வழங்க, மறுபுறம் தேநீர் சீரான ஆற்றலை அளிக்கிறது.

Related News

Latest News