மீனின் உயிரணுக்களிலிருந்து காபி கப் தயாரித்துள்ளனர் சீன விஞ்ஞானிகள்.
சீனாவின் தியாஜின் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் பிளாஸ்டிக்கிற்கு மாற்றான ஒரு பொருளைக் கண்டறியும் முயற்சியில், சால்மன் மீனின் விந்தணுக்களையும் தாவர எண்ணெயையும் பயன்படுத்தி, அகுவா வெல்டிங் முறையில் காபி கப் தயாரிக்கும் முயற்சியில் வெற்றிபெற்றுள்ளனர்.
இந்த வகை காபி கப், பிளாஸ்டிக் கப்புகளைவிட 97 சதவிகிதம் குறைவான கார்பனை உமிழ்வதாகக் கண்டறிந்துள்ளனர். இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். AMERICAN CHEMICAL SOCIETY என்னும் இதழில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 30 மில்லியன்களுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுத் தூக்கியெறிப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றில் 8 சதவிதிதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.
இதில் 1 மில்லியன் முதல் 2 மில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் நீரிலும் நிலத்திலும் சிதறிக்கிடந்து விலங்குகளாலும் மனிதர்களாலும் நுகரப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சால்மன் மீன்களின் விந்தணுக்களைப் பயன்படுத்தி காஃபி கப் தயாரிக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.