Sunday, June 22, 2025

இளநீரை இரவில் குடிக்கலாமா? குடித்தால் என்னாகும்?

இளநீரில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பலவகை நன்மைகளை அளிக்கின்றன. இளநீரில் முக்கியமாக பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி மற்றும் பி வகைகள், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.

இளநீர் உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தி, உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் டையூரிடிக் பண்புகள் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தி, சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும்.

பொதுவாக, இளநீர் காலை அல்லது பகல் நேரத்தில் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இரவு நேரத்தில் இளநீர் குடிப்பதால் என்ன நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

இரவு நேரத்தில் இளநீர் குடிப்பதால் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலில் நச்சுக்களை வெளியேற்ற உதவும். இரவு முழுவதும் உடல் நீர் இழப்பை தடுக்கும். இரவு நேரம் தசைகள் சோர்வடைந்திருக்கும் போது இளநீர் குடிப்பது தசை வலியை குறைக்க உதவும்.

இரவு நேரத்தில் அதிகமாக இளநீர் குடிப்பது காரணமாக அதிக சிறுநீர் வெளியேற்றம் ஏற்பட்டு, தூக்கத்தில் இடையூறு ஏற்படலாம்.

இரவு நேரத்தில் குடிப்பது 1 கப் (200 மில்லி) அளவுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. அதிகமாக குடிப்பது உடல் சோர்வு மற்றும் நீரிழப்பை ஏற்படுத்தலாம். எனவே இளநீர் காலை அல்லது பகல் நேரத்தில் குடிப்பது நல்லது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news