தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு துறை சார்பாகவும் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. பேரவையில் அதிமுகவினர் பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். தொடர்ந்து மக்கள் பிரச்சினை குறித்து பேச வாய்ப்பு வழங்கவில்லை என சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் : எதிர்க்கட்சித்து உறுப்பினர்கள் கருப்பு சட்டையுடன் வந்துள்ளனர். கருப்பு சட்டை அணிந்ததற்காக நான் என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். நல்லவேளை காவி உடையில் வராமல் கருப்பு சட்டையில் வந்துள்ளனர் என தெரிவித்தார்.