“அரைவேக்காட்டுத் தனமான அரசியல்”.., எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது : மாமன்னர் ராஜராஜன் ஆட்சி செய்த இந்த சோழ நாட்டின் காற்றை சுவாசிக்கும்போதே ஒரு கம்பீரம் பிறக்கிறது. தொடந்து 4 ஆண்டுகளாக காவிரி டெல்டா பாசனத்திற்காக உரிய நேரத்தில் தண்ணீரை திறந்து விடுகிறோம்.

மேட்டூர் அணையையும், கல்லணையையும் குறித்த நேரத்தில் நேரில் வந்து திறந்து வைத்த முதல் முதலமைச்சர் நான்தான் என்பதில் பெருமைப்படுகிறேன்.

செய்திகளை பார்க்காமல், படிக்காமல் அரைவேக்காட்டுத்தனமான அரசியலை செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி உட்கட்சி பிரச்சனை, கூட்டணி பிரச்சனையை மறைக்க அரசியல் செய்து வருகிறார்.

திமுக அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. இது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லை. பெட்டியின் சாவி தொலைந்துவிட்டதா என கேட்கிறார். அவரது எண்ணம் பெட்டியில்தான் இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related News

Latest News