Tuesday, July 1, 2025

கேரளாவில் பெரியார் நினைவகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்

கேரளா மாநிலம் வைக்கத்தில், தமிழக அரசு சார்பில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

வைக்கம் போராட்டத்தை பெரியார் வழிநடத்தியதன் நினைவாக, கேரளா மாநிலத்தில் உள்ள வைக்கத்தில் பெரியாருக்கு நினைவகம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, தமிழக அரசு சார்பில் 8.14 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

பெரியார் நினைவகத்தில் உள்ள அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், விசிக தலைவர் திருமாவளவன் உள்பட பல கலந்து கொண்டனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news