சென்னை திருவொற்றியூரில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற SIR அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அதிமுக-திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது.
சென்னை திருவொற்றியூரில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில், SIR தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், திமுக, அதிமுக, பிஜேபி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.
அப்போது, அதிமுகவினரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் விதமாக, வாக்காளர் படிவங்களை கொடுக்காமல் திமுகவினரே வைத்துக்கொள்வதாக குற்றம்சுமத்தி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு, அதிமுக மாமன்ற உறுப்பினர் வாடான ஏழாவது வார்டில்தான் இப்படி நடக்கிறது என கூறி திமுகவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பானது.
