Monday, December 23, 2024

வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் குளிர் : வீட்டுக்குள்ளே முடங்கிய மக்கள்

வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருவதால் மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளனர். டெல்லியில் வெப்பநிலை 7 டிகிரி செல்சியக்குக்கு கீழே சரிந்ததால் அங்கு கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது.

அலிபூர், ஆனந்த் விஹார், பவானா மற்றும் புராரி, தல்கடோரா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான குளிரால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் டில்லியில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Latest news