Friday, February 14, 2025

விமான நிலையத்தில் தற்கொலை செய்துகொண்ட சி.ஐ.எஸ்.எப் வீரர்

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் இன்று காலை 10.40 மணியளவில் ராணுவ படைவீரர்கள் தங்கும் அறை ஒன்றில் சி.ஐ.எஸ்.எப் வீரர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பினர்.

அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டார் என கூறியதையடுத்து, உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த வீரர் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. மேலும் இது குறித்த தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Latest news