வலுக்கட்டாயப்படுத்தும் சீன அரசு – அதிர்ச்சியில் மக்கள்   

38
Advertisement

கொரோனா மீண்டும் தலைதூக்க தொடங்கிருக்கும் சீனாவில் உள்ள மக்கள் கொரோனாவை விட , லாக்டவுன்களால் அதிகம் பயப்படுகிறார்கள். அதற்கு வலுவான காரணங்கள் உள்ளன, ஷாங்காய் மற்றும் பிற இடங்களில் இருந்து வெளிவரும் ஏராளமான வீடியோக்களில் இதற்கான விடை வெளிஉலகிற்கு வந்துள்ளது.

தற்போது பகிரப்பட்டுள்ள மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில் , ​​பெண் ஒருவர் சாலையின் ஒரு புறத்தில் கீழே படுத்து கூச்சலிட்டபடி உள்ளார் .அந்த பெணின் மீது ஒரு சுகாதார பணியாளர் ஒருவர் உட்காந்து , தன் கால்களை வைத்து அந்த பெணின் உடலை அசையாதபடி , மற்றும் அந்த பெணின் கைகளையும் இருக்க பிடித்துக்கொள்கிறார்.

ஒருகட்டத்தில் , அந்த பெணின் வாய் திறக்கப்பட்டு மற்றொரு சுகாதார பணியாளரால் கொரோனா சோதனைக்காக மாதிரியை எடுத்துவிடுகிறார்.

Advertisement

அந்த வீடியோ இணையத்தை அதிர வைத்துள்ளது. “அவர்கள் எப்படி ஏழை மக்களை அடிபணியச் செய்கிறார்கள் என்பதை இந்த வீடியோ காட்டுகிறதாக சில இணையவாசிகள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டதையடுத்து ,மக்களை கட்டாயப்படுத்தி கொரோனோ சோதனைகளை மேற்கொள்ளும் சீனா அரசின் நடவடிக்கைகள் குறித்த வீடியோகளை பலர் பகிர்ந்து வருகின்றனர்.