உலக வல்லரசுப் போட்டியில், சீனா மீண்டும் ஒருமுறை தனது ராணுவ பலத்தை நிரூபிக்க, ஒரு பயங்கரமான புதிய ஆயுதத்தைச் சோதித்துள்ளது. இந்தச் சோதனை, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது. அந்த ஆயுதத்தின் பெயர், “ட்ரிபிள் நியூக்ளியர் ஸ்ட்ரைக்” (Triple-Nuclear Strike) , அதாவது “மும்மடங்கு அணு ஆயுதத் தாக்குதல்”.
அப்படி என்ன ஸ்பெஷல் இந்த ஆயுதத்தில்? இது உலகப் பாதுகாப்பிற்கு ஏன் ஒரு பெரிய அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது? வாருங்கள் விரிவாகப் பார்க்கலாம்.
எதற்காக இந்த புதிய ஆயுதம்? என்றால்,
நவீனப் போர்க்களங்கள், எதிரிகளின் மிக முக்கியமான ராணுவத் தளங்கள், கமாண்ட் சென்டர்கள், அணு ஆயுதக் கிடங்குகள் போன்றவை, பூமிக்கு அடியில் மிக ஆழமான, வலுவான பதுங்கு குழிகளுக்குள் (Bunkers) வைக்கப்பட்டிருக்கும். சாதாரண குண்டுகளால், இந்த பதுங்கு குழிகளை ஒன்றும் செய்ய முடியாது.
சமீபத்தில், அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது, “பங்கர் பஸ்டர்” (Bunker Buster) எனப்படும் சக்திவாய்ந்த குண்டுகளை வீசித் தாக்கியது. ஆனால், அந்தத் தாக்குதலுக்குப் பிறகு, அந்த நிலையங்களின் மையப்பகுதி தப்பிப் பிழைத்திருக்கலாம் என்று சில தகவல்கள் கூறுகின்றன.
இந்தச் சவாலைச் சமாளிக்கத்தான், சீனா ஒரு புதிய, பயங்கரமான வழியைக் கண்டுபிடித்துள்ளது.
அது தான் “ட்ரிபிள் நியூக்ளியர் ஸ்ட்ரைக்”…
இது எப்படிச் செயல்படும்? என்றால்,
சவுத் சைனா மார்னிங் போஸ்டில் வெளியான ஒரு அறிக்கையின்படி, சீனாவின் ராணுவப் பொறியாளர்கள், ஒரே இலக்கை, அடுத்தடுத்து மூன்று முறை அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்கும் ஒரு புதிய தொழில்நுட்பத்தைச் சோதித்துள்ளனர்.
அதாவது, ஒரு போர்முனை (Warhead) மட்டும் தாக்காது. மூன்று சிறிய அணு ஆயுதங்கள், கிட்டத்தட்ட ஒரே நேரத்தில், ஒரே இலக்கைத் தாக்கும்.
இது ,முதல் தாக்குதலில்: பதுங்கு குழியின் மேல்பகுதியில் உள்ள மண் மற்றும் பாறைகளை அகற்றி, ஒரு பெரிய பள்ளத்தை உருவாக்குகிறது.
இரண்டாவது தாக்குதலில்: அந்தப் பள்ளத்திற்குள் நுழைந்து, பதுங்கு குழியின் கண்ணாடி சுவர்களை உடைத்தெறியும்.
மூன்றாவது தாக்குதலில்: இறுதியாக, பதுங்கு குழியின் மையப்பகுதிக்குள் நுழைந்து, உள்ளே இருக்கும் அனைத்தையும் முற்றிலுமாக “அழித்துவிடும்.
இந்த மும்மடங்குத் தாக்குதலின் அதிர்வலைகள், பூமிக்கு அடியில் இருக்கும் எதையும் விட்டுவைக்காது.
இதன் விளைவுகள் என்ன?
சீனாவின் இந்த புதிய தொழில்நுட்பம், உலக ராணுவ சமநிலையையே மாற்றியமைக்க கூடியது. இனி, எந்த ஒரு நாட்டின் நிலத்தடி ராணுவத் தளமும் பாதுகாப்பானது அல்ல என்ற ஒரு செய்தியை சீனா இதன் மூலம் சொல்கிறது. இது, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு ஒரு நேரடி எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
இந்தத் தொழில்நுட்பம், ஒரு புதிய, ஆபத்தான அணு ஆயுதப் போட்டிக்கு வழிவகுமோ என்ற அச்சத்தை, பாதுகாப்பு நிபுணர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த “மும்மடங்கு அணு ஆயுதத் தாக்குதல்” திட்டம், உலக அமைதிக்கு விடப்பட்ட ஒரு பெரும் சவாலாகவே கருதப்படுகிறது.