அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கிய வர்த்தக போர் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. சீனாவும் அதற்கு பதிலடி கொடுத்து பதில் போட்டுள்ள நிலையில், உலகளாவிய வர்த்தக நிலை மிகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போரில் யார் வெற்றி பெறுவார்கள் என்னும் பரபரப்பு தகவல் அதிகம் வெளியாகின்றன. ஆனால் இந்தியாவிற்கு இதனால் லாபமா அல்லது நஷ்டமா என்பது பற்றிய கேள்வியும் உள்ளது.
2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் 8 அன்று, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்கா சீனாவுக்கு விதித்துள்ள வரிகளுக்கு பதிலாக, சீனா அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 34% கூடுதல் வரியை விதித்தது. அமெரிக்கா இதற்கு பதிலாக 104% வரியை உயர்த்தியது. இதன் விளைவாக உலகளாவிய வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படுகின்றது.
சீனாவின் முக்கிய பொருட்கள், குறிப்பாக அரியவகை கனிமங்கள் மற்றும் தனிமங்கள், உலகளாவிய உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால், அமெரிக்கா சீன பொருட்களை தவிர்க்க முடியாது.
இந்த நிலைமையில், இந்தியா பல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். சீனாவின் சந்தையில் ஏற்பட்ட இடைவெளிகளை நிரப்பி, இந்தியா அமெரிக்க சந்தையில் தன் பங்கை பெருக்க முடியும். மின்சார வாகனங்கள், மருந்துகள், இரசாயனங்கள், ஆடைகள், உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா ஏற்றுமதி அதிகரிக்க முடியும்.
ஆனால், இந்த வர்த்தக போர் இந்தியாவிற்கு முழுமையான நன்மைகளை அளிக்குமா என்பது குறித்து சந்தேகங்கள் உள்ளன.