Monday, May 12, 2025

முடிவுக்கு வந்த வர்த்தக போர் : சீனா, அமெரிக்கா எடுத்த முக்கிய முடிவு

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற போதே தங்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தார். அடுத்தடுத்து சீனாவுக்கு வரி மேல் வரி போட்டார். சீனாவும் பதிலுக்கு வரி போட துவங்கியது.

அமெரிக்கா சீனாவின் பொருட்களுக்கு இறக்குமதி வரியை 145% ஆக உயர்த்தியது. பதிலுக்கு சீனாவும் அமெரிக்க பொட்களுக்கான இறக்குமதி வரியை, 125% ஆக உயர்த்தியது.

இந்நிலையில், தற்போது வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலும், 90 நாட்களுக்கு பரஸ்பர வரிகளை திரும்ப பெற சீனா, அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் ஒப்புக்கொண்டன.

அமெரிக்கா சீனப் பொருட்களுக்கான வரிகளை 145 சதவீதத்தில் இருந்து, 30 சதவீதமாக குறைக்கவும், சீனா அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கவும் முடிவு செய்துள்ளது.

Latest news