சிறுவன் கடத்தல் வழக்கு : ஏடிஜிபி ஜெயராமன் கைது

திருவள்ளூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினரும், புரட்சி பாரதம் கட்சி தலைவருமான ஜெகன் மூர்த்தியை காதல் விவகாரத்தில் ஆள் கடத்தல் புகாரில் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். 

இது தொடர்பாக விசாரணைக்கு பூவை ஜெகன் மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். அங்கு அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.

ஆள் கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராமன் அரசு வாகனத்தை பயன்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இதையடுத்து ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related News

Latest News