முதலமைச்சர் விஜய்யின் ‘சிறப்பான’ சம்பவம் ! இந்த நம்பரை குறிச்சுக்கோங்க!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது நிர்வாகத்தில் ஊழலுக்கு எதிராகப் ஒரு மிகப்பெரிய போர்ப் பிரகடனத்தை அறிவித்துள்ளார். அரசு அலுவலகங்களில் ஊழலை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், இதுவரை யாரும் நினைத்துப் பார்க்காத ஒரு துணிச்சலான ஊக்கத் திட்டத்தை அவர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இந்தப் புதிய கொள்கையின்படி, எந்தவொரு அரசுத் துறையிலாவது உங்களிடம் வெறும் 1,000 ரூபாய் லஞ்சம் கேட்கப்பட்டால் கூட, அதனை முறையான ஆதாரங்களுடன் புகார் அளிக்கும் சாமானிய குடிமக்களுக்கு அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையை வலுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, தற்போது ஒட்டுமொத்த இந்தியாவையே தமிழகம் பக்கம் திரும்பப் பார்க்க வைத்துள்ளது.

ஊழல் புகார்களைப் பொதுமக்கள் 24 மணி நேரமும் தெரிவிக்கும் வகையில் 1800 425 1555 என்ற சிறப்பு கட்டணமில்லா எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் மில்லி மீட்டர் மாறாமல் நிறைவேற்றி வரும் முதலமைச்சர் விஜய், அரசு சேவைகளில் இடைத்தரகர்களை ஒழிக்க ‘தமிழ்நாடு குடியுரிமை அட்டை’ என்ற புதிய திட்டத்தையும் கையில் எடுத்துள்ளார்.

இந்த அறிவியல் பூர்வமான அட்டை மூலம், பொதுமக்கள் எந்தவொரு சான்றிதழுக்காகவோ அல்லது நலத்திட்டத்திற்காவோ யாருக்கும் ஒரு பைசா லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. அரசுத் திட்டங்களின் அனைத்துப் பலன்களும் நேரடியாக மக்களின் வீட்டு வாசலிலேயே கிடைக்கும் வகையில் நிர்வாகம் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளது.

நிர்வாக வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் மூத்த அதிகாரிகளுடன் சிறப்பு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஊழலுக்கு எதிராக மட்டுமல்லாமல், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகவும் முதலமைச்சர் விஜய் கடும் போர் தொடுத்துள்ளார்.

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி குண்டர் சட்டம் பாயும் என்று அவர் எச்சரித்துள்ளார். மேலும், காவல் நிலையங்களில் பொதுமக்கள் புகார் அளிக்கும்போது எவ்வித அச்சுறுத்தலும் இன்றி வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட, அனைத்து நிலையங்களிலும் காணொளிப் பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி உறுப்பினர்கள் யாரும் அரசு அலுவலகப் பணிகளில் தலையிடக்கூடாது என்ற கடுமையான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, முதலமைச்சர் விஜய்யே ஒரு சாதாரண அரசு ஊழியரைப் போலத் தினமும் சரியான நேரத்திற்குத் தலைமைச் செயலகத்திற்கு வந்து தனது பணிகளை ஆற்றுவது, ஐஏஎஸ் அதிகாரிகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. “மக்களின் பணத்தில் ஒரு ரூபாய் கூட நான் தொடமாட்டேன், அடுத்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் ஊழலை 100 சதவீதம் ஒழிப்பேன்” என்று அவர் விடுத்துள்ள உறுதிமொழி, லஞ்சத்திற்குப் பழகிப்போன சில அரசு ஊழியர்களுக்குப் கிலியை ஏற்படுத்தியிருந்தாலும், சாமானிய மக்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் இது ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது. கோட்டையில் ஒரு புதிய நிர்வாகத் தளபதியாகத் தனது ஆட்டத்தைத் தொடங்கியுள்ள முதல்வர் விஜய்யின் இந்த அதிரடிகள், தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News