Thursday, February 6, 2025

பிரமாண்ட சூரிய மின்கலன் உற்பத்தி ஆலை : நெல்லையில் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திருநெல்வேலி சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 4,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 350 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள டாடா குழுமத்தின் சூரிய மின்கலன் உற்பத்தி ஆலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த புதிய ஆலையால், 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதில் 80 சதவீத பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. மாற்றுதிறனாளிகள் 100 பேருக்கு வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது.

Latest news