Wednesday, February 5, 2025

கடல் நடுவே கட்டப்பட்ட கண்ணாடி பாலம் – முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 37 கோடி ரூபாய் மதிப்பிலான கண்ணாடி இழை பாலத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கடந்த 2000-வது ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். வருகிற 1-ந் தேதி இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது.

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி நகர் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 2500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திறந்து வைத்தனர்.

Latest news