‘தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள்’ : மகளிர் தின வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின்

உலக மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது :

வெல்லும் தமிழ்ப் பெண்களே…

நீங்கள் வெல்வதற்கு உலகும் – உங்களுக்குத் துணை நிற்க திராவிட மாடலும் இருக்கிறது!

தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உடன்நிற்க நமது திராவிட மாடல் அரசு இருக்கிறது. அனைவருக்கும் உங்கள் ஸ்டாலினின் உலக மகளிர் நாள் நல்வாழ்த்துகள்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related News

Latest News