Friday, July 4, 2025

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காவிரி டெல்டா பாசனத்திற்காக சேலம் மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார்.

மேட்டூர் அணையில் இருந்து இன்று 92-வது ஆண்டாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை தண்ணீரை திறந்து வைத்து காவிரி ஆற்றில் பூக்கள் தூவி வரவேற்றார்.

முதற்கட்டமாக விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. பின்னர் படிப்படியாக 12 ஆயிரம் கன அடி வரை நீர்திறப்பு உயர்த்தப்பட உள்ளது. மேட்டூர் அணை நீர்திறப்பு மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 17.15 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news