மாணவர்களின் உயர்வுக்காக பாடுபடும் நல்லாசிரியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பெற்றோர்கள், ஆசிரியர்களை நம்பி பிள்ளைகளை ஒப்படைக்கிறார்கள். பிள்ளைகள் பெற்றோரை விட ஆசிரியர்கள் சொல்வதையே அதிகம் நம்புகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களுக்கு தமிழை, அறத்தை, அரசியலை, அறிவியலை என அனைத்தையும் கற்பித்து, அவர்களின் உயர்வுக்காக பாடுபடும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்து என குறிப்பிட்டுள்ளார்.