Sunday, August 31, 2025
HTML tutorial

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் : குடும்பத்தினர், அமைச்சர்கள் வருகை!

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏற்படவே, அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் 2 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பார்க்க அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மகள் செந்தாமரை ஆகியோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அதேபோல அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் மருத்துவமனை வந்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News