குழந்தைகளுக்கு கோழி ரத்தம்….சீனாவில் பரவிய விநோத வழக்கம்

340
Advertisement

ஊசிமூலம் குழந்தைகளுக்கு கோழி ரத்தத்தை செலுத்தும்
சிக்கன் பேரண்டிங் என்னும் விநோத வழக்கம்
சீனாவில் வெகு வேகமாகப் பரவி வருகிறது.

சீனாவின் பீஜிங், ஷாங்காய், குவாங்ஷோ உள்ளிட்ட
மாகாணங்களில் நடுத்தர வகுப்பு மக்களிடம் கடந்த சில
வருடங்களாக இந்த வழக்கம் பிரபலமாகி வருவதாக SupChina.com
என்னும் சீன ஊடகம் தெரிவித்துள்ளது.

தங்கள் குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை
உருவாக்கித் தரவே ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவர்.
ஆனால், சீனப் பெற்றோர்களின் இந்தச் செயலுக்குப் பின்னணி என்ன தெரியுமா?

தங்கள் குழந்தைகள் புத்திசாலியாகத் திகழ வேண்டும்,
புற்றுநோய் வராமல் இருக்க வேண்டும், வழுக்கைத் தலை
வராமலிருக்க வேண்டும், மலட்டுத்தன்மை ஏற்படாமலிருக்க
வேண்டும் என்பது உள்பட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள்
ஏற்படக்கூடாது ஆகிய காரணங்களுக்காகப் பெற்றோர்கள்
இப்படிச் செய்கிறார்களாம்.

இப்படிச் செலுத்தப்படும் கோழி ரத்தத்தால், குழந்தைகளிடம்
உயர் செயல்திறன் அதிகரிப்பதாகவும், கல்வி, விளையாட்டு என
அனைத்திலும் குழந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பதாகவும்
அந்நாட்டுப் பெற்றோர்கள் நம்புவதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதுமட்டுமல்ல, தற்போதுள்ள சீன இளைஞர்கள் மன அழுத்தத்தால்
பாதிக்கப்பட்டு வருவதாகவும், அதுபோல் இப்போதுள்ள குழந்தைகள்
பின்னாளில் மன அழுத்தத்தால் இப்படிப் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும்
கோழி ரத்தத்தை செலுத்தி வருவதாகக் கூறுகிறார்களாம்.

எங்கே செல்லும் இந்தப் பாதை… யாரோ யார் அறிவாரோ…?