கேரள நடிகை மினு முனீர் என்பவரை திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் கேரளாவில் கைது செய்து தற்பொழுது சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார். கேரள மாநிலம் பத்தணம் திட்டா மாவட்டத்தில் இருக்கக்கூடிய திருவல்லா பகுதியை சேர்ந்த இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சென்னை வந்த மினு முனி, அவருடைய உறவினர் பெண்ணான 14 வயது சிறுமியை நடிப்பதற்காக ஆசை வார்த்தை கூறி சென்னை அழைத்து வந்திருக்கிறார்.
அப்பொழுது சென்னையில் ஒரு தனியார் விடுதியில் அந்த சிறுமியை தங்க வைத்து அந்த சிறுமியிடம் நான்கு நபர்கள் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த சிறுமி அங்கிருந்து தப்பித்து மீண்டும் கேரளாவிற்கே சென்று இருக்கிறார்.
இந்நிலையில் தான் கடந்த மார்ச் மாதம் அந்த சிறுமி மினு முனீர் மீது பாலியல் குற்றத்துக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் அளித்திருக்கிறார். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் இந்த வழக்கை கேரளாவில் எடுத்துக்கொண்டு உள்ளனர். இப்போது இவரை கைது செய்து சென்னை கொண்டு வந்துள்ளனர்.