Thursday, July 31, 2025

நவீனமயமாக்கப்படும் சென்னை மந்தைவெளி பேருந்து முனையம்

சென்னை மந்தைவெளி பேருந்து முனையம், ரூ.151 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகத்துடன் நவீனமயமாக்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில் ரூ.151 கோடி மதிப்பீட்டில் சென்னை மந்தைவெளி பேருந்து முனையம் நவீனமயமாக்கப்படுகிறது.

வணிக வளாகத்துடன் 29 ஆயிரத்து 385 சதுர மீட்டர் பரப்பளவில், 2 கட்டடங்களாக சென்னை மந்தைவெளி பேருந்து முனையம் அமைகிறது.

முதல் கட்டடத்தில் வணிகம் அல்லது அலுவலக இடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டடத்தில் சில்லறை விற்பனை இடங்கள், ஓய்வறைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News