ஒருதலைபட்சமாக செயல்படும் அலுவலர் – கொந்தளிப்பில் பத்திரிகையாளர்கள்

press
Advertisement

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை- ஊடகத்துறையில் பணியாற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும்
கொரோனா பேரிடர் காலத்தில் உயிரை பணயம் வைத்து பணிபுரிந்த பத்திரிகையாளகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, மாவட்டத்திலிருந்து மூத்த பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர்.

ஆனால், உண்மையான பத்திரிகையாளர்களுக்கு விருதுகளை வழங்காமல், ஒரு சில அரசியல் கட்சியைச் சார்ந்த பத்திரிகையாளர்களுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் விருதுகளை வழங்கியதால், மூத்த பத்திரிகையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், அதை மாவட்ட ஆட்சியர் உரிய ஆய்வு செய்யாமல் வழங்கியது பெரும் மன உளைச்சலை ஏற்படுதியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை செய்து, மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement