IPL தொடரில் பேட்ஸ்மேன்கள் தான் கொண்டாடப்படுகின்றனர். பவுலர்கள் மதிக்கப்படுவதில்லை என்னும் குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஷர்துல், ரபாடா என முன்னணி பவுலர்கள் பலரும் பேட்டிங்-பவுலிங் சமநிலையில் இருப்பது போல ஆடுகளங்களை அமைக்க வேண்டும், என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் IPL போட்டிகளில், வீரர்களின் Batகளை சோதனை செய்யும் முறையை, BCCI அமல்படுத்தி இருக்கிறது. இதன்படி 4வது அம்பயர் ஓபனர்களின் பேட்டினை செக் செய்து மைதானத்துக்குள் அனுப்புவார். அடுத்தடுத்த வீரர்களின் Batகள், களத்தில் உள்ள அம்பயர்களால் பரிசோதனை செய்யப்படும்.
அனுமதிக்கப்பட்ட அளவினை விட நீளமான பேட்டுகளை, வைத்து வீரர்கள் அதிக ரன்கள் அடிக்க வாய்ப்புகள் இருப்பதால், BCCI இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி ஹர்திக் பாண்டியா, சிம்ரன் ஹெட்மயர் ஆகியோரின் பேட்டுகள், ஆடுகளத்திலேயே சோதிக்கப்பட்டு இருக்கின்றன. இதுகுறித்து IPL சேர்மன் அருண் துமால், ” விளையாட்டின் நியாயத்தன்மை பராமரிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என விளக்கம் அளித்துள்ளார். IPL தொடரினைப் பொறுத்தவரை, முதல் ஓவரில் இருந்தே சிக்ஸர்கள் பறக்கின்றன. எனவேதான் இந்த விதியை அவசரமாக BCCI அமல்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.