“யாராவது அவனை கொஞ்சம் நிறுத்துங்கடா…” என்று சொல்லவைத்துவிட்டது சமீப நாட்களில் பிரபலமாகி வரும் ஜிப்லி Style புகைப்படங்களும் ஜிப்லி அனிமேஷனும். சரி… உலகை அதிரவிடும் ஜிப்லி Style art-ன்னா என்னன்னு தெரியுமா? Studio Ghibli என்ற புகழ்பெற்ற ஜப்பானிய அனிமேஷன் ஸ்டுடியோவால் இது உருவாக்கப்பட்டது. ஹாயோ மியாசாகி மற்றும் ஐசோ டக்கஹாட்டோ ஆகியோர் இதை அடுத்த நிலைக்கு கொண்டுசென்றனர். தற்போதைய Trend என்னவென்றால் உங்கள் புகைப்படத்தையும் Chat GPT மிகவும் அழகான, வண்ணமயமான, சூப்பரான ஜிப்லி Style படமாக மாற்றிக்கொடுக்கிறது. இந்த படங்களுக்கு பலர் அடிமையாகவே மாறிவிட்டனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்நிலையில் ஜிப்லி அனிமேஷன் பயன்பாட்டை கொஞ்சம் நிறுத்தி வைக்குமாறு Chat GPT நிறுவனர் சாம் ஆல்ட்மேன் வேண்டுகோள் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் செயல் நுண்ணறிவு தளமான Chat GPTயின் மூலம் ஜிப்லி என்ற அனிமேஷன் படங்களை உருவாக்குவது, சமீபத்தில் உலகளவில் டிரெண்டாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அனிமேஷன் படங்களை உருவாக்குவதற்காக Chat GPT-யை அதிகளவிலான பயனர்கள் பயன்படுத்துவதை கொஞ்சம் நிறுத்துமாறு ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் எக்ஸ் பக்கத்தில், “ஜிப்லி படங்கள் உருவாக்குவதை கொஞ்சம் நிறுத்துங்கள். எங்கள் குழுவினருக்கும் கொஞ்சம் உறக்கம் தேவை என்று பதிவிட்டுள்ளார்.” சாட் ஜிபிடியில் செயல் நுண்ணறிவால் நொடிப் பொழுதில் அனிமேஷன் படங்களை உருவாக்கித் தருவதால், இதனை மக்கள் தற்போது பொழுதுபோக்காக மாற்றியிருக்கின்றனர். செல்ஃபி முதல் திருமண கொண்டாட்டம் வரை அத்தனையும் ஜிப்லி அனிமேஷனாக மாற்றப்பட்டு டிரெண்ட் செய்யப்பட்டு வருவதை பார்க்கமுடிகிறது. இந்த அம்சம், ஆரம்பத்தில் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் என்று இருந்ததை மாற்றி ஒரு சில நாட்களாக அனைவருக்கும் இலவசமாக Chat GPT அள்ளி கொடுத்தது.
இந்த காரணத்தினால் ஜிப்லி அனிமேஷன் அதிகளவில் பயன்படுத்தப்பட்டதால், ஞாயிற்றுக்கிழமை நண்பகல் முதல் சாட் ஜிபிடி தளத்தின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டு முற்றிலுமாக முடங்கியது. இது தான் சமயம் என்று களமிறங்கிய Grok AI மட்டுமல்லாமல் சரசரவென இங்கொன்றும் அங்கொன்றுமாக முளைத்துள்ள App-கள் நாங்கள் உங்கள் புகைப்படங்களை ஜிப்லி Style-லில் மாற்றித்தருகிறோம் என்று பட்டையை கிளப்புகின்றன.