Tuesday, January 27, 2026

பயணிகள் கவனத்திற்கு., திருப்பூர் வழியாக இயக்கப்படும் ரெயில் சேவையில் மாற்றம்

எஸ்.எம்.வி.டி. பெங்களூரு ரெயில்வே யார்டில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன்படி திருவனந்தபுரத்திலிருந்து திருப்பூர் வழியாக எஸ்.எம்.வி.டி. பெங்களூருக்கு இயக்கப்படும் ஹம்சபார் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16319) இன்று (சனிக்கிழமை) பையாப்பனஹள்ளி வரை மட்டுமே இயக்கப்படும்.

அதேபோல் எர்ணாகுளத்திலிருந்து எஸ்.எம்.வி.டி. பெங்களூருவுக்கு இயக்கப்படும் ரெயில் (வண்டி எண் 16378) இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) பையாப்பனஹள்ளி வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News