சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இரண்டு முக்கிய விரைவு ரயில்கள் தற்காலிகமாக தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
உழவன் எக்ஸ்பிரஸ்:
சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் (வண்டி எண்: 16865): செப்டம்பர் 17 முதல் நவம்பர் 9 வரை, இந்த ரயில் சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து இரவு 11:00 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும்.
தஞ்சாவூர்-சென்னை எழும்பூர் (வண்டி எண்: 16866): செப்டம்பர் 18 முதல் நவம்பர் 10 வரை, இந்த ரயில் தஞ்சாவூரிலிருந்து இரவு 8:50 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்தை அதிகாலை 3:45 மணிக்கு சென்றடையும்.
அனந்தபுரி எக்ஸ்பிரஸ்:
சென்னை எழும்பூர்-கொல்லம் (வண்டி எண்: 20635): செப்டம்பர் 17 முதல் நவம்பர் 9 வரை, இந்த ரயில் தாம்பரத்திலிருந்து இரவு 8:20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும்.
கொல்லம்-சென்னை எழும்பூர் (வண்டி எண்: 20636): செப்டம்பர் 18 முதல் நவம்பர் 10 வரை, இந்த ரயில் கொல்லத்திலிருந்து மதியம் 2:55 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்தை மறுநாள் அதிகாலை 5:20 மணிக்கு சென்றடையும்.