நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்க ரூ. 500 நோட்டுகளையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கடப்பாவில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் ட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது : ரூ. 500 நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அதற்கு பதிலாக, பல நாடுகளில் டிஜிட்டல் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. அதனால் இந்தியாவிலும் அதனை ஊக்குவிக்க வேண்டும் என பேசியுள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை திரும்பப் பெற்று புதிய ரூ. 2,000 நோட்டுகளை கொண்டுவந்துள்ளீர்கள். தேவைப்பட்டால் அதிக மதிப்பிலான அனைத்து ரூபாய் நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும். பதிலாக டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்துங்கள், இதனால் கருப்புப் பணத்தை ஒழிக்கலாம்” என்று பிரதமரிடம் கூறியதாகத் தெரிவித்தார்.