தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில், இன்றும், நாளையும் டெல்டா, தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 15ம் தேதிக்கு பின் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும் இதனால் டெல்டா, தென்மாவட்டங்களில் மற்றும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழை பெய்யக்கூடும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் கணித்துள்ளார்.
3-வது புயல் சின்னம் தெற்கு வங்கக்கடலில் 23ம் தேதிக்கு பிறகு உருவாவதற்கான சூழல் நிலவி வருகிறது என்றும் இது சமீபத்தில் கடந்து சென்ற டிட்வாவை போல நல்ல மழையை கொடுக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
