Monday, September 1, 2025

கலவரத்தை தூண்டியதாக முன்னாள் பிரதமருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

ஆப்பிரிக்கக் நாட்டான சாட்டில், முன்னாள் பிரதமர் சக்ஸஸ் மஸ்ரா (வயது 41) மீது கடந்த 2021-ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கு எதிரான கிளர்ச்சியை தூண்டும் நடவடிக்கைகளுக்கு காரணமானதாகக் கூறி குற்றம் சாட்டப்பட்டு, அவரை 20 ஆண்டு சிறைதண்டனை மற்றும் சுமார் ரூ.15 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு அரசாங்கத்துக்கு எதிராகக் கிளர்ச்சி நடைபெற்றது. இந்தக் கலவரத்தில் 30 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட அதிபர் இட்ரிஸ் டெனி இட்னோ கொல்லப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சி தலைவரான மஸ்ரா, அதிபர் மஹாமத் டெபியை கடுமையாக விமர்சித்தார்.

இதயடுத்து கடந்த மே மாதம் விவசாயிகளுக்கும், கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பைச் சேர்ந்த 35 பேர் பலியாகினர். இதற்கு மஸ்ராவே முக்கிய காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. எனவே கலவரத்தைத் தூண்டியதாகக் கூறி போலீசார் அவரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கில் மஸ்ராவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் சுமார் ரூ.15 கோடி அபராதம் விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News