‘25% பெண்கள், 15% ஆண்கள் சட்டப்பூர்வ வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள்’

308
Advertisement

பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தி ஆண்களுக்கு இணையாகக் கொண்டு வர அரசு ஆலோசித்து வரும் வேளையில், தேசிய சுகாதார கண்காணிப்பு அமைப்பு , இளவயது திருமணங்களின் உண்மை நிலையை ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியீட்டுஉள்ளது.

அதன்படி , 18 முதல் 29 வயதுடைய நான்கில் ஒரு  பெண்ணும் , 21 முதல் 29 வயதுடைய 15 சதவீத ஆண்களும் முறையே 18 மற்றும் 21 வயதுக்கு முன்னதாகவே திருமணம் செய்து கொள்வதாக அறிக்கை கூறுகிறது.

Advertisement

பெண் குழந்தைகளுக்கான இளவயது திருமணங்களில் அதிக விகிதம் மேற்கு வங்கத்தில் 42 சதவீதம், அதைத் தொடர்ந்து பீகாரில் 40 சதவீதம், திரிபுராவில் 39 சதவீதம், ஜார்கண்டில் கிட்டத்தட்ட 35 சதவீதம் மற்றும் ஆந்திராவில் 33 சதவீதம். அசாமில், 31 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன் திருமணம் செய்து கொள்கிறார்கள்; தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூவில் 28 சதவிகிதம், தெலுங்கானாவில் 27 சதவிகிதம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 25 சதவிகிதம்.

லட்சத்தீவில் 4 சதவீதம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக்கில் தலா 6 சதவீதம் பெண்கள் சீக்கிரம் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஹிமாச்சல பிரதேசம், கோவா மற்றும் நாகாலாந்தில்  தலா 7 சதவீதம் மற்றும் கேரளா மற்றும் புதுச்சேரி தலா 8 சதவீதமும் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.