அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் தனியார் வங்கிகள் அலட்சியம் காட்டுவதாக மத்திய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.
மத்திய அரசு, ஜன் தன் வங்கிக் கணக்குகள், காப்பீடு, ஓய்வூதியம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றை செயல்படுத்துவதில் தனியார் வங்கிகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிதிச்சேவை திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில், தனியார் துறை வங்கிகள் அலட்சியம் காட்டுவதாக மத்திய அரசின் நிதியமைச்சகம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஜன் தன் யோஜனா, ஜீவன் ஜோதி யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா திட்டங்களில் தனியார் வங்கிகள் அலட்சியம் காட்டுகின்றன என்றும் முத்ரா கடன் திட்டத்தில் தனியார் வங்கிகளின் பங்களிப்பு 24 சதவிகிதம் மட்டுமே உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. Stand Up இந்தியா திட்டத்தில் 23 சதவிகிதம் மட்டுமே உள்ளதாக கூறியுள்ளது.