Thursday, April 10, 2025

மத்திய அரசு மக்களுக்கு செய்த நல்ல விஷயம்! இனிமேல் இதற்கு எல்லாம் free..!

மத்திய அரசு வங்கிகளில் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ஒரு நல்ல தீர்வை நிறைவேற்றியுள்ளது. நாமினி விவரங்களைப் புதுப்பிப்பது அல்லது மாற்றுவதற்கான கட்டணத்தை தற்போது நீக்கியுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட தகவலின்படி, இதுவரை வங்கிகள் ரூ.50 கட்டணம் விதிப்பதாக இருந்தது, ஆனால் இப்போது PPF கணக்குகளில் நாமினி விவரங்களைப் புதுப்பிப்பது இலவசமாகவும், எளிதாகவும் மாற்றப்பட்டுள்ளது.

PPF என்பது மத்திய அரசு பொதுமக்களுக்கு வழங்கும் ஒரு சேமிப்புத் திட்டமாகும். இது ஏழை மற்றும் எளிய மக்கள் நீண்ட காலத்தில் பணத்தை சேமித்து, வரி இல்லாமல் உறுதியான வருமானத்தை பெற உதவுகிறது. PPF இல் முதலீடு செய்தால், மக்கள் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் பல வரிச் சலுகைகள் பெற முடியும்.

இந்த புதிய மாற்றத்தின் கீழ், PPF வைப்புதொகையாளர்கள் தங்கள் நிதியை நான்கு நாமினிகளுக்கு பகிர்ந்தளிக்க பரிந்துரைக்கப்படுகிறார்கள். மேலும், வங்கிகளில் பாதுகாப்பு லாக்கர்களில் சேமிக்கப்பட்ட பொருட்களையும் நாமினிகள் பயன்படுத்த முடியும். 

சில வங்கிகள், உதாரணமாக SBI, HDFC மற்றும் ICICI போன்ற சில வங்கிகள், தங்கள் சந்தாதாரர்களுக்கு இணைய வங்கி மூலம் நாமினி விவரங்களை புதுப்பிக்க அனுமதிக்கின்றன.

இந்த ஆன்லைன் செயல்முறை மிகவும் எளிதாக உள்ளது. முதலில், உங்கள் வங்கியின் இணையதளத்தில் உள்நுழைந்து, PPF கணக்கு பிரிவுக்கு செல்ல வேண்டும். அங்கு “நாமினி அப்டேட்” அல்லது “நாமினேஷன் மாற்றம்” என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். புதிய வாரிசு விவரங்களை அதாவது பெயர், உறவு,  போன்றவற்றை உள்ளிட்டு, OTP மூலம் ஒப்புதல் பெற்ற பின்பு, கோரிக்கையை சமர்ப்பித்து, ஒப்புதல் பெறவும். இதன் மூலம் நாமினி விவரங்கள் புதுப்பிக்கப்படும்.

ஆன்லைனில் மாற்றம் செய்ய முடியாதபட்சத்தில், உங்கள் வங்கி அல்லது தபால் அலுவலகத்திற்கு நேரடியாக  சென்று  ஆஃப்லைன் முறையில் இதை செய்ய முடியும்.  அங்கு சென்று நாமினி படிவம் F ஐ கையில் வாங்கி, அந்த படிவத்தில் புதிய நாமினி விவரங்களை நிரப்ப வேண்டும். இதில், பெயர், முகவரி, உறவுமுறை மற்றும் பல நாமினிகள் இருந்தால், அவர்களது சதவீத பங்கு விவரங்களை குறிப்பிட வேண்டும். 

இதற்குட்பட்ட அனைத்து நாமினி விவரங்களுடன் உங்கள் அடையாளச் சான்றுகளான ஆதார், பான் அல்லது பிற ஆவணங்களை இணைத்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை உங்கள் வங்கிக் கிளை அல்லது தபால் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், அவர்கள் உங்கள் நாமினி விவரங்களை புதுப்பித்து முடித்துவிடுவர்.

Latest news