சைபர் மோசடி மற்றும் டிஜிட்டல் கைதுகள் தொடர்புடைய 9.42 லட்சத்திற்கும் அதிகமான சிம் கார்டுகள் மற்றும் 2,63,348 ஐ.எம்.இ.ஐ., (IMEI) எண்களை மத்திய அரசு தடை செய்துள்ளது.
அனைத்து வகையான சைபர் குற்றங்களையும் ஒருங்கிணைத்து சமாளிக்க சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) என்ற மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தேசிய சைபர் குற்ற புகார் போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குற்றங்களை விரைவாக கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க முடியும் என உள்துறை இணையமைச்சர் சஞ்சய் பண்டி கூறியுள்ளார்.