Tuesday, August 12, 2025
HTML tutorial

சுங்கச் சாவடிகளை கடந்து செல்ல பாஸ் அறிமுகம் : மத்திய அரசு தகவல்

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்கத் கட்டணம் செலுத்த ‘பாஸ்டேக்’ முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில், வருடாந்திர பாஸ் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.3000 கட்டணம் செலுத்தினால் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டு முழுவதும் அல்லது 200 பயணங்கள் வரை இலவசமாக பயணிக்கலாம் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த வருடாந்திர பாஸ் முறை ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News