Thursday, December 25, 2025

சென்ட்ரல் வங்கியில் 1000 காலிப்பணியிடங்கள் : ரூ.85 ஆயிரம் வரை சம்பளம்

பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் வங்கியில் காலியாக உள்ள 1,000 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்ட்ரல் வங்கியில் உள்ள இப்பணியிடங்களுக்கு 30.11.2024 தேதியின்படி, குறைந்தபட்சம் 20 வயது இருக்க வேண்டும். அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சென்ட்ரல் வங்கியில் கிரெடிட் அதிகாரி பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.48,480 முதல் அதிகபடியாக ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும்.

மேலும் விவரங்களை அறிய : https://www.centralbankofindia.co.in/en/recruitments

Related News

Latest News