பிரேசிலில் உள்ள பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதாவில் கடந்த மாதம் அதிபர் கையெழுத்திட்டார். செல்போன்களில் குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவதால் கவனச்சிதறல் ஏற்படுவதாக ஆய்வு தரவுகள் வெளியான நிலையில், இந்த மசோதா கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், பிரேசில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது. நெருக்கடி, ஆபத்து மற்றும் கல்விப் பணி போன்ற குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர் என்றும் மற்ற நேரங்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு பெட்டகத்தில் செல்போன்களை வைக்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.